நரசிங்கபுரம் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆத்தூர், செப்.26: நரசிங்கபுரம் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நரசிங்கபுரம்  நகராட்சியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும்  பயன்பாட்டை தடுக்க, பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். தடையை மீறி  விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து,  கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.நரசிங்கபுரம் நகராட்சியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பிளாஸ்டிக்  ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக  நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணன் தலைமையில், நகராட்சி பணியாளர்கள் மற்றும்  துப்புரவு ஊழியர்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு  பிரசாரத்தை செம்மையாக மேற்கொள்வோம் என உறுதிமொழி ஏற்றனர்.  தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டனர்.

Related Stories: