திருப்புத்தூர், சிங்கம்புணரி தாலுகாவில் 33 கண்மாய்களில் குடிமராமத்து பணி பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு

திருப்புத்தூர், செப். 26: திருப்புத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களில் மணிமுத்தாறு வடிநிலக் கோட்டம் மூலம் ரூ.697 லட்சம் மதிப்பீட்டில் 33 கண்மாய்களின் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருவதை நேற்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருக்கோஷ்டியூர் ஊராட்சியில் ரூ.35.50 லட்சம் மதிப்பீட்டில் கடம்பன் கண்மாய், கருப்பூர் ஊராட்சியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கருப்பூர் கண்மாய், மாதவராயன்பட்டி ஊராட்சியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பெரியகண்மாய், மருதிப்பட்டி ஊராட்சியில் ரூ.21.20 லட்சம் மதிப்பீட்டில் மருதிப்பட்டி கண்மாய் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் கிருங்காக்கோட்டை ஊராட்சியில் ரூ.15.30 இலட்சம் வடகரமன் தன்குந்தர் கண்மாய் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், திருப்புத்தூர் மற்றும் சிங்கம்புணரி தாலுகாக்களில் மணிமுத்தாறு வடிநிலக் கோட்டத்தின் மூலம் 33 கண்மாய்கள் கீழ் ரூ.697 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 1511.30 ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயன்பெறுவார்கள். சுமார் 40 சதவிகித பாசன வசதி பெருகும் வகையில் கண்மாய்கள் நீர்பிடிப்பு கொள்ளளவு அதிகரிக்கும். மேலும், இத்திட்டத்தில் கண்மாய்களின் கரைகள் பலப்படுத்துதல், கண்மாயின் உட்பகுதி ஆழப்படுத்துதல், சேதமடைந்த மடைகளை புதிதாக கட்டுதல், கண்மாய்களின் கழுங்குகள் சீரமைத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் பணிகள் இவற்றுடன் கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய் சீரமைத்தல் என அனைத்துப் பணிகளும் அந்தந்தப் பகுதி விவசாயிகள் கொண்ட குழு கண்காணிப்பிலேயே பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினர். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை மணிமுத்தாறு வடிநிலக் கோட்டப் பொறியாளர்கள் சங்கர், பரமசிவம், ஆனந்தமாஜீயவளன், வினோத்குமார், நூருலுல்லா மற்றும் விவசாய சங்கக்குழு தலைவர்கள், இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: