மணப்பாறை அருகே லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலி

மணப்பாறை, செப். 26: மணப்பாறை அருகே நேற்று அதிகாலை லாரி கவிழ்ந்து 6 மாடுகள் பலியாயின. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இருந்து 2 லாரிகளில் 20 மாடுகளை ஏற்றிக்கொண்டு தேனி மாவட்டம் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதில் வீரபத்திரன் என்பவர் ஓட்டிவந்த லாரி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மணப்பாறை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவர் தூங்கிவிட்டதாக தெரிகிறது. இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் இடதுபுறமாக ஓடி கவிழ்ந்தது. இதில் அந்த லாரியில் கொண்டு சென்ற மாடுகளில் 6 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.உடனடியாக டிரைவர் கிரேனை ஏற்பாடு செய்து லாரியை தூக்கி நிறுத்தி, இறந்துபோன மாடுகளை அதில் ஏற்றிக்கொண்டு கம்பத்தை நோக்கி புறப்பட்டார். தகவலறிந்த மணப்பாறை டிஎஸ்பி குற்றாலிங்கம், எஸ்.ஐ வினோத் ஆகியோர் அந்த லாரிைய மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

Related Stories: