வெங்கமேடு நகரில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரூர், செப். 26: கரூர் வெங்கமேடு செல்வநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வரும் மின்கம்பங்களை அகற்றி சற்று தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு செல்வம் நகரின் துவக்கப்பகுதியிலும், மத்திய பகுதியிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மின்கம்பங்கள் அடுத்தடுத்து உள்ளன.இதன் காரணமாக, பெரிய வாகனங்கள் இந்த சாலையில் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. இந்த மின்கம்பங்களை சாலையோரம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத்திடம் பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலையும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வரும் இந்த மின்கம்பங்களை சாலையோரம் மாற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: