ஆய்வு செய்த எஸ்பி பேட்டி சிறிய மழை பெய்தாலே திருமயம் அரசு பள்ளி மைதானத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

திருமயம், செப்.26: திருமயம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீரை அகற்ற பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி அருகிலேயே விளையாட்டு திடல் உள்ளது. இது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு சம்பந்தமான பயிற்சி அளிக்க பயன்படுவதோடு, சுற்றுப்புற குடியிறுப்புவாசிகள், இளைஞர்கள் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி, விளையாட பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே திருமயம் பகுதியில் சிறியளவு மழை பெய்தாலும் மழைநீர் விளையாட்டு திடல் முழுவதும் குளம் போல் தேங்குவதோடு நீண்ட நாட்களுக்கு மழைநீர் வடியாமல் விளையாட்டு திடலில் தேங்கி கிடக்கிறது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த மழை வரும்போது அருகிலுள்ள சாக்கடை நீரும் விளையாட்டு திடலில் உள்ள நீருடன் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதுபள்ளி மாணவர்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதி என்பதால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் விளையாட்டு திடலில் உள்ள கழிவறையை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லை போல் உள்ளதே தவிர இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தொpவிக்கின்றனர். எனவே வரும் மாதங்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.அதிகாரிகள் மெத்தனம் திருமயம் பகுதியில் சிறியளவு மழை பெய்தாலும் மழைநீர் விளையாட்டு திடல் முழுவதும் குளம் போல் தேங்குவதோடு நீண்ட நாட்களுக்கு மழைநீர் வடியாமல் விளையாட்டு

திடலில் தேங்கி கிடக்கிறது.

Related Stories: