அமைச்சரின் மகன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கியவர்கள் மீது குண்டாஸ்

திண்டுக்கல், செப்.20:  அமைச்சரின் மகன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவருடைய மகன் வெங்கடேசன் மெங்கிள்ஸ் ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தார். அப்போது இவரது வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது.  இவ்வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் அருகே அ.வெள்ளோட்டை சேர்ந்த ரவிக்குமார்(29), திண்டுக்கல் அருகே பூதிப்புரத்தை சேர்ந்த வினோத்குமார்(30), திண்டுக்கல் அருகே பெரியபள்ளபட்டியை சேர்ந்த பாண்டி(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூன்று பேர் மீதும் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் குண்டர் தடுப்புகாவல் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரை செய்தார். இதைதொடர்ந்து ரவிக்குமார், வினோத்குமார், பாண்டி ஆகியோரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

Related Stories: