வனத்துறை ஊழியர் பலி

பழநி, செப்.20: பழநி அருகே எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அஜய் நிர்மல்(30).  கொடைக்கானல் சாலையில் உள்ள பெருமாள்மலையில் வனத்துறை வாட்சராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து பைக்கில் வீடு திரம்பிக் கொண்டிருந்தார். கொடைக்கானல் சாலை புளியமரத்து சோதனைச்சாவடி அருகே வரும்போது எருமை மாடு ஒன்று குறுக்கே வந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அஜய் நிர்மல், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழநி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: