அகில இந்திய அளவில் ஸ்டிரைக் கரூர் மாவட்டத்தில் 1,700 லாரிகள் ஓடவில்லை

கரூர், செப். 20: ஸ்டிரைக் காரணமாக கரூர் மாவட்டத்தில 1700 லாரிகள் ஓடவில்லை.மத்திய அரசின் புதிய சட்டத்தினால் லாரி பதிவுக்கு கட்டணம் உயர்வு, அபராதம் போன்ற அம்சங்களை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் அறிவித்தனர். கரூர் மாவட்டத்தில் 1700 லாரிகள் உள்ளன. 400 வேன்கள் உள்ளன. இவை அனைத்தும் நேற்று இயங்கவில்லை. டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை போன்ற தொழில் நிறுவனங்களில் இருந்தும், வாழைக்காய் லோடு போன்ற விவசாய விளை பொருட்களையும் ஏற்றி செல்லவில்லை.இதனால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: