செங்கோட்டை அருகே மராமத்து பணியில் முறைகேடு புளியரை கரிகுளத்தில் தனுஷ்குமார் எம்.பி. ஆய்வு

செங்கோட்டை, செப். 20: செங்கோட்டை அருகே புளியரை கரிகுளத்தில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து குளத்தை தனுஷ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். புளியரை கரிகுளம் குடி மராமத்து பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக பாசன விவசாயிகள் தனுஷ்குமார் எம்.பி.யிடம் புகார் தெரிவித்தனர். அத்துடன் குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர், குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertising
Advertising

ஆய்வின்போது விவசாயிகள் சங்க மண்டல செயலாளர் செல்லத்துரை, பகவதிபுரம்கூட்டுறவு  சங்கத் தலைவர் ரவிசங்கர், துணைத்தலைவர் மாரியப்பன், திமுக புளியரை ஊராட்சி செயலாளர் பிச்சையா, புதூர் பேரூர் செயலாளர் கோபால், இளைஞர் அணி சுப்புராஜ்,  பகவதிபுரம்  கருப்பன் மற்றும் கணேசன் ,வேலுச்சாமி, கென்னடி, ஆறுமுகம் உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: