அடிப்படை வசதிகள் அறவே இல்லை பழநி சப்கலெக்டர் அலுவலகம் முற்றுகை பொதுமக்கள் ஆவேசம்

பழநி, செப். 19: அடிப்படை வசதிகள் செய்து தரக்கூறி பழநி சப்கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிைட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பழநி அருகே கோதைமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது கொத்தனார் காலனி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அனைவரும் ஏழை, நடுத்தர மக்கள் மக்கள் ஆவர். இப்பகுதி குடிநீர் வந்து நீண்ட நாட்களாகிறது. போர்வெல்களும் பழுதடைந்து கிடக்கின்றன. இதனால் தண்ணீர் தேடி பல கிலோமீட்டர் தூரத்திற்கு அலைந்து திரிந்து வருகின்றனர். தவிர இப்பகுதியில்சாலைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.மேலும் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் ரோந்துப்பணி மேற்கொள்ளாததால் திருட்டு பயம் நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் குடிநீர் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி நேற்று பழநி சப்கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சப்கலெக்டர் உமாவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்ற சப்கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகே மக்கள் கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: