கடையத்தில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டுவைப்பு

கடையம், செப். 19: கடையத்தில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

கடையம் பகுதியில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கிச் செல்வது உள்ளிட்ட அட்டகாசங்களை செய்து வருகின்றன.
Advertising
Advertising

இதுகுறித்து கடையம் வனச்சரக அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடையம் வனச்சரகர் நெல்லைநாயகம் உத்தரவின் பேரில் குரங்கு நடமாடும் பகுதியில் கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்பட்டது. மேலும் குரங்குகளைப் பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டது. மாவட்ட வனத்துறை கால்நடைத்துறை ஆய்வாளர் ஆர்னால்ட் தலைமையில் வனக்காப்பாளர் மணி, வனத்துறை கால்நடைத்துறை உதவியாளர் கந்தசாமி மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் கூண்டு வைத்தனர்.

Related Stories: