கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது பொதுமக்கள் ஒத்துழைப்பு தர திட்ட இயக்குனர் அறிவுரை

க.பரமத்தி, செப்.19: பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது, இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா கூறினார். க.பரமத்தி கடைவீதியில் ஈஸ்வரன் கோயில் பின்புறம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான குளம் ஒன்று நீண்ட நாட்களாக பராமரிக்கபடாமல் இருந்து வந்தது. இதில் முட்புதர்கள் மண்டிக்கிடந்ததால் மழை காலங்களில் மழைநீர் வீணாகி வந்தது. இந்த குளத்தை கரூர் ரோட்டரி சங்கம், க.பரமத்தி ரோட்டரி சமுதாய அணி, ஊர் பொதுமக்கள் ஆகியோர் சார்பில் குளத்தை தூர் வாருவது என முடிவு செய்யபட்டது. இந்த பணி தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயந்திராணி, (ஊராட்சிகள்) பழனிகுமார், கரூர் ரோட்டரி சங்க, க.பரமத்தி ரோட்டரி சமுதாய அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜமீர்பாஷா துவக்கி வைத்து பேசினார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா பங்கேற்று பேசியதாவது, கரூர் மாவட்டத்தில் 434 குளங்கள் 67 குரு பாசன குளங்களும் 367 குளம் குட்டை ஊரணிகள் சர்வே செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள அக்கிரமிப்பினை முறையாக அகற்றி நீர் நிலை குளங்களை தூர்வாரி மரக்கன்று நட்டு பாதுகாக்கப்பட் உள்ளன. கரூர் மாவட்டத்தில் 2.40 லட்சம் பனை விதைகள் தயாராக உள்ளது. பல்வேறு ஊர்களில் உள்ள குளத்தினை தூர் வாருவதற்கு உள்ளூர் பிரமுகர்கள் முன் வர வேண்டும். நீர் நிலை குளங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு பயன்படுத்தகூடாது. அதே போல் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாது என்றார்.

Related Stories: