மகமாயி தேவி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் குவிந்தனர்

ஊத்துக்கோட்டை, செப்.17: பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில்   மலையாள மகமாயி தேவி திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில்  மலையாள மகமாயி தேவி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 14ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.  

பின்னர் கலசங்கள் பிரதிஷ்டை, காப்பு கட்டுதலும், மறுநாள் 15ம் தேதி அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி மற்றும் முதல்கால யாகசாலை பூஜையும், அஷ்டபந்தனமும் நடைபெற்றது.

நேற்று காலை மகா அபிஷேகம், யாகசாலை பூஜையும் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.   

பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்தனர்.  அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  

பிற்பகல் அன்னதானமும், இரவு அம்மன்  வீதியுலாவும் நடைபெற்றது.

Related Stories: