பயிர்களை நாசப்படுத்தும் மயில்கள் விவசாயிகள் கவலை

ஈரோடு, செப். 11:  ஈரோடு மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை மயில்கள் நாசப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக பெய்த மழையின் காரணமாகவும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உழவு பணி மேற்கொண்டனர். இதில் நிலக்கடலை, நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆனால் விளைநிலங்களுக்குள் மயில்கள் அதிகளவில் வந்து பயிர்களையும், நிலக்கடலைகளையும் தோண்டி எடுத்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதில், ஈரோடு வைராபாளையம் பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. இதனால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வனத்துறையினர் மயில்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: