முக்கட்டி பழங்குடியினர் பள்ளியில் இளம் குடிமக்கள் மன்றம் துவக்கம்

கூடலூர், செப்.11:  கூடலூர் அருகே உள்ள முக்கட்டி அரசு பழங்குடியினர் பள்ளியில் இளம் குடிமக்கள் மன்றம் மற்றும் பாலியல் தொல்லைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமையில் நடந்தது. பட்டதாரி ஆசிரியர் மாரியப்பன் வரவேற்றார். குழந்தை நேய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ்  மன்றம் துவக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விளக்கம் பேசினார். நெலாக்கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் அன்பரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இளம் சிறார்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அரசு மற்றும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மாணவ மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: