மாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு

தென்காசி, செப். 11: மாநில கை எறிபந்து, இறகுபந்து போட்டியில் பங்கேற்க தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம்  சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள்  தேர்வு செய்யும் போட்டி கன்னியாகுமரி வட்டாரம் சார்பில் பாளை பெல்  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் கை எறிபந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்  மதீஸ் ஜூனியர் பிரிவிலும், மாணவர் லிமான் சூப்பர் சீனியர் பிரிவிலும்  வெற்றிபெற்று மாநில போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

பாளை விங்ஸ் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கில் நடந்த மாநில இறகு பந்துயில் பங்கேற்பதற்கான போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் நவீன் சூப்பர் சீனியர் பிரிவில்  வெற்றிபெற்றார். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்விக்குழும சட்ட ஆலோசகர்  வக்கீல் திருமலை, பள்ளித் தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை,  தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக  அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை,  வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் என ஏராளமானோர் பாராட்டினர்.

Related Stories: