திருவில்லி. பெரிய பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் தொடக்கம்

திருவில்லிபுத்தூர், செப். 10: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சன்னதியில் உள்ள பெரிய பெருமாள் கோயிலில், பவித்ர உற்சவம் நேற்று தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள பெரிய பெருமாள் கோயில் சன்னதியில் பவித்ர உற்சவம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடக்கும். இதன்படி பவித்ர உற்சவம் நேற்று துவங்கியது. இதையடுத்து, பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பவித்ர உற்சவத்தின்போது பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு மஞ்சள் நிற நூல்களைக் கொண்டு மாலை அணிவிப்பர். இந்தாண்டும் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மஞ்சள் நிற நூல் மாலை சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டது. இதனையொட்டி, பெரிய பெருமாள் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் செய்திருந்தனர். பவித்ர உற்சவம் வரும் 15ம் தேதி வரை நடக்கும்.

Related Stories: