திமுக சார்பில் கபடி போட்டி தென்பழஞ்சி அணி சாம்பியன்

திருமங்கலம், செப்.10: மதுரை விரகனூரில் தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடந்த கபடி போட்டியில், தென்பழஞ்சி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மதுரையை அடுத்துள்ள விரகனூரில் கபடி போட்டிகள் நடந்தது. போட்டிகளை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், மத்திய தொகுதி எம்எல்ஏ பி.டி.ஆர் தியாகராஜன் துவக்கி வைத்தனர்.இதில் மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை, கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 80 கபடி அணி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். நேற்று இரவு மின்னொளில் இறுதி போட்டி நடந்தது. தென்பழஞ்சி அணி, மேலமடை அணிக்கு இடையே நடந்த விறுவிறுப்பான இந்த போட்டியில் தென்பழஞ்சி அணி 27- 20 என்ற புள்ளி கணக்கில் மேலமடை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.வெற்றி பெற்ற அணிக்கு மதுரை தெற்குமாவட்ட செயலாளர் மணிமாறன் சுழற்கோப்பை மற்றும் 15 ஆயிரம் பரிசு தொகையை வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த மேலமடை அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன், திமுக செயற்குழு உறுப்பினர் ஏர்போட் பாண்டி, ஓன்றிய செயலாளர்கள் சுதந்திரம், தனபால், திருமங்கலம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிஅமைப்பாளர் பாசபிரபு செய்திருந்தார்.

Advertising
Advertising

Related Stories: