உடுமலை ரவுண்டானா விரிவாக்க பணியால் போக்குவரத்து நெரிசல்

உடுமலை, செப். 10:உடுமலையில் ரவுண்டானா அமைக்கும் ேபாது, சாலை விரிவாக்க பணியும் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே பழனி, பொள்ளாச்சி, பைபாஸ் சாலை இணையும் இடத்தில் ரவுண்டானா அமைக்கும் பணி நடக்கிறது. அப்பகுதியில் முதல் கட்டமாக சாக்கடை கால்வாயின் மேற்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் காரணமாக டிவைடர் வைக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே சாலை குறுகியுள்ள நிலையில், தற்போது பழனி சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு பணிகள் நடைபெறுவதால், நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும் சாலை விரிவாக்க பணிக்காக தொலைபேசி கேபிள்களை மாற்றி அமைக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. குறிப்பாக, உடுமலை சந்தைக்கு வரும் வாகனங்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றன. பீக் அவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. எனவே, சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும், தோண்டப்பட்டுள்ள குழிகளை உடனடியாக மூட வேண்டும் அல்லது ரவுண்டானா அமைக்கும் பணி முடிந்த பிறகு, சாலை விரிவாக்க பணியை தொடங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: