மாவட்ட நீச்சல் போட்டி அமிர்தா பள்ளி வெற்றி

கோவை, செப். 10: கோவை மாவட்ட நீச்சல் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி ஜென்னி கிளப்பில் நடந்தது. போட்டியை, கோவை மாவட்ட நீச்சல் கழக தலைவர் வின்சென்ட் அடைக்கலராஜ் துவக்கிவைத்தார். இதில், கோவையை சேர்ந்த 7 வயது முதல் 17 வயதிலான பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 280 பேர் பங்கேற்றனர். பிரி ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பட்டர்பிளை உள்பட 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், ஆண்கள், பெண்கள் என ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த மொத்தம் 10 பேருக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியில், 413 புள்ளிகளை பெற்று எட்டிமடை அமிர்தா வித்யாலயா பள்ளி  ஓட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றது. மேலும், 160 புள்ளிகளை பெற்ற மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி 2ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர் பாலவண்ணன் வழங்கினார்.  மேலும், தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட நான்கு குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
Advertising
Advertising

இதில், தமிழக நீச்சல் கழகம் துணைதலைவர் ஜார்லஸ், கோவை நீச்சல் கழக செயலாளர் லாரன்ஸ் தம்பி, ெஜன்னி கிளப் பொதுமேலாளர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: