திசையன்விளை சுடலை ஆண்டவர் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

திசையன்விளை, ஆக. 22:  திசையன்விளை வடக்குத்தெரு   சுடலை ஆண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடை விழாவில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை அன்னலெட்சுமி துரைப்பாண்டியன் நடத்தினார். இன்று காலை 8  மணிக்கு கோயிலில் பூஜையை தொடர்ந்து ஆனந்த விநாயகர் கலா மன்றம்  சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடக்கிறது. மாலை 3 மணிக்கு  பாரத்கேஸ் வெங்கடேஸ்வரா ஏஜென்சி சார்பில் சமையல் போட்டி, 5 மணிக்கு ‘அன்பும், ஆன்மீகமும்’ என்ற தலைப்பில் டாக்டர் கதிரேசனின்  சமயசொற்பொழிவு நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு திருமுருகன் நாட்டிய கானா  குழுவினரின் பள்ளி மாணவிகளுக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி,  தொடர்ந்து சுடலை ஆண்டவர் இந்து புதுஎழுச்சி மன்றம் சார்பில் இன்னிசை  கச்சேரி நடக்கிறது.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் வரிதாரர்கள் செய்து வருகிறார்கள்.

Advertising
Advertising

Related Stories: