சுற்றுலா பயணிகள் சிரமம் பழநி கடைகளில் 1.5 கிலோ புகையிலை பறிமுதல்

பழநி, ஆக. 14: தினகரன் செய்தி எதிரொலியாக பழநி நகரில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த புகையிலை பொருட்களை உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் குட்கா, புகையிலை பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பழநி நகரில் உள்ள சில கடைகளில் இந்த குட்கா, புகையிலை பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. பக்தர்கள் அதிகளவில் வரும் கோயில் நகரான பழநியில் இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வேதனையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பழநி உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் செல்லத்துரை தலைமையிலான அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertising
Advertising

புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், காந்தி மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 15 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், கடைகளில் இருந்த 1.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுமென்றும், இனி ஆய்வின்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு அபராதம், சிறை தண்டனை கிடைக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்து

சென்றனர்.

Related Stories: