பேவர்பிளாக் பதிக்கும் முன்பு வி.கே.புரத்தில் சாலை நடுவிலுள்ள குடிநீர் தொட்டி அகற்றப்படுமா?

வி.கே.புரம், ஆக. 14:  வி.கே.புரத்தில் சாலையின் நடுவிலுள்ள குடிநீர் தொட்டியை, பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் முன்பு அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். வி.கே.புரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள பல தெருக்களில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்தெருவில், சாலை நடுவே சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இதனை மாற்றி தெருவின் ஓரத்தில் வைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். குடிநீர் தொட்டியை சாலையின் நடுவே அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. எனவே தெருவில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் முன்பு குடிநீர் தொட்டியை இடமாற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: