ஆழ்வார்குறிச்சி அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

கடையம், ஆக. 14:  ஆழ்வார்குறிச்சி அருகே அண்ணனை கத்தியால் சரமாரியாக குத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர். ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளம் அம்மன் கோயில் தெருவை  சேர்ந்வர் குமாரசாமி  மகன் தினகரன் என்ற சேகர் (54). இவரது தம்பி மாதவன் (39). மாதவனுடன் அவரது தாயார் அருள்சுந்தரம் வசித்து வருகிறார். நேற்று மாலை  மாதவன் வீட்டிற்கு வந்த  தினகரன், தனது  தாயை   அவதூறாக  பேசி தகராறில் ஈடுபட்டார்.

Advertising
Advertising

அப்போது அங்கு வந்த   மாதவன், தாயை பற்றி   பேசக்  கூடாது எனக் கூறவே அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாதவன்,  தான்மறைத்து  வைத்திருந்த கத்தியால்  தினகரனை சராமரியாக குத்தி வெட்டினார். இதில் படுகாயமடைந்த தினகரனை ஆழ்வார்குறிச்சி போலீசார் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதுகுறித்து  கடையம்  இன்ஸ்பெக்டர்  ஆதிலட்சுமி   வழக்கு பதிந்து மாதவனை கைது  செய்தார்.

Related Stories: