முதியவரை ஏமாற்றி நகை, பணம் அபேஸ் திருச்சி திருவெள்ளரை பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

மண்ணச்சநல்லூர், ஆக.11: மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை பெருமாள் கோயிலில் நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு தங்கம், வெள்ளிக் குடங்களில் புனிதநீர் யானை மீது வைத்து எடுத்து செல்லப்பட்டது.ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயில்களில் ஒன்றான திருவெள்ளரை புண்டரிகாட்சப் பெருமாள் கோயிலில் நேற்று ஜேஷ்டாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை திருவெள்ளரை கோயில் துவஜஸ்தம்பத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் புனிதநீர் யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அங்கிருந்து குசஹஸ்திக்கரை மண்டபம் சேர்ந்தது. அங்கிருந்து தீர்த்தக்குடங்கள் திருவீதி உலா வந்து பின்னர் மூலஸ்தானம் சேர்ந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேக சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertising
Advertising

Related Stories: