குருவிகுளம் ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகள் அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்

சங்கரன்கோவில் ஆக.11: குருவிகுளம் ஓன்றியம் அழகாபுரியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ல்பாபிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார்.  அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் முலம் அழகாபுரி கிராமத்தில் உள்ள கள்ளர் குளத்தில் பணி துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மைப்பாறை கிராமத்தில் ஊரணியை தூர்வாரும் பணியும் துவக்கப்பட்டது. குருவிகுளம் ஒன்றியத்தில் 11 குளங்களும், 29 ஊரணிகளிலும் குடிமராமத்து பணிகள் துவக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி பேசும் போது, ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால் கிராமப்புற மக்களின் சிரமங்களை அறிந்தவர், மழைக்கு முன்பு குளங்களை தூர்வாரினால் தான் அதிக தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதனால் நிலத்தடிநீர் உயரும். விவசாய வேலைகளும் திட்டமிட்டபடி நடக்கும். நானும் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவள்தான். அதனால் விவாசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை அறிந்துள்ளேன்.

இந்த குளங்களை தூர்வாருவதில் அரசின் பங்கு இருந்தாலும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து செய்தால் மேலும் பயன்பெறலாம். இந்த திட்டம் நமக்கானது என்ற எண்ணத்தில் செயல்படுங்கள். கிராமத்தில் உள்ள 7பேர் கொண்ட குழு அமைத்து அதில் உள்ளவர்கள் மூலம் குளம் தூர்வாரும் பணி கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். எனவே பொதுமக்களும் தங்கள் பணி என்ன என உணர்ந்து செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் திட்ட அதிகாரி பழனிக்குமார், அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, கூட்டுறவு சங்க தலைவர்கள் வேல்ச்சாமி, ஆறுமுகம், ஓன்றிய செயலாளர்கள் சுப்பையாபாண்டியன், ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, முத்துபாண்டி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கடம்பூர் மாரியப்பன், இணை செயலாளர் தங்க மாரியப்பன், அரசு ஓப்பந்ததாரர் குட்டிமாரியப்பன், நகர பேரவை செயலாளர் சௌந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: