இடைநின்ற 15 மாணவர்கள் படிக்க ஊக்கம்

திருவள்ளூர், ஆக. 8: தமிழக அரசின் ஆலோசனைப்படி கல்வியில் பின்தங்கிய பகுதி மற்றும் கல்வியை தொடராமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை கல்வியில் தொடர திருவள்ளூர் சிஎஸ்ஐ கௌடி மேல்நிலைப்பள்ளி நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த ஆண்டு திருவள்ளூரை அடுத்த ராமாபுரம் பகுதியில் இடைநின்ற மாணவ, மாணவிகள் 15 பேரை கண்டறிந்து, அவர்களுக்கு அனைத்தும் இலவசமாக கொடுத்து ஆர்வமுடன் படிக்க ஊக்கம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் பள்ளி இளைஞர் இயக்கங்கள் சேர்ந்து தலைமை ஆசிரியர் ஏ.ஸ்டேன்லி தேவபிரியம் தலைமையில், பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. முகாம் நிறைவாக கல்வியின் தேவையை உணர்த்தி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் அருள்செல்வன், என்எஸ்எஸ், என்சிசி உட்பட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: