நாகை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் வேண்டும் மத்திய ஊரக வளர்ச்சி துறை செயலாளர் உத்தரவு

நாகை. ஜூலை 19: நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளரும், ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் மத்திய ஒருங்கிணைப்பு அலுவலருமான சஞ்சீவ்பட்ஜோஷி உத்தரவிட்டார்.நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது. மத்திய ஒருங்கிணைப்பு அலுவலரும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளருமான சஞ்சீவ்பட்ஜோஷி தலைமை வகித்தார். கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். நாகை மாவட்டத்தில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் ஜல்சக்தி அபியான் எனப்படும் நீர்வள ஆதாரங்களை பெருக்கி நீரினை சேமிக்கும் திட்டப் பணிகளை பல்வேறு துறைகளால் ஜூலை 2019 முதல் வாரம் முதல் நவம்பர் 2019 வரை நாகை மாவட்டத்தில் செயல்படுத்திட உள்ளது.

ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்திட மத்திய ஒருங்கிணைப்பு அலுவலரும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளருமான சஞ்சீவ் பட்ஜோஷி தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் கிரிதர், தரம்வீர்சிங் ஆகியோர் கொண்ட குழு கடந்த 17ம் தேதி தொடங்கி நாளை (19ம் தேதி) வரை மூன்று நாட்கள் தல ஆய்வு செய்திட உள்ளார்கள். முதல் கட்டமாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஜல்சக்தி அபியான் இயக்கத்தில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரித்தல், பாரம்பாரிய குளங்கள் மற்றும் நீர்நிலைகளை சீரமைத்தல், மறுபயன்பாடு ஆழ்குழாய் கிணறுகளை மீள நிரப்பும் அமைப்பு உருவாக்குதல். ஆற்றுப்படுகை வளர்ச்சி, தீவிரகாடு வளர்ப்பு போன்ற ஐந்து தலைப்புகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை திட்டங்களின் மூலம் மாணவர்கள், பொதுமக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜல்சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதன்பின்னர் அவர் கூறியதாவது: நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: