ரயில்வே தனியார் மயமாக்க எதிர்ப்பு தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு, ஜூலை 16:  ரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ரயில்வே தொழிலாளர்கள் 24 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் சந்திரமனோகர் தலைமை தாங்கினார். ரயில்வே லோகோ ஓடும் தொழிலாளர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடாது. ரன்னிங் அலவன்ஸ் குறைக்க கூடாது. புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய திட்டத்தை தொடர வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு சமமான பென்சன் வழங்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் செயல்பாடுகளை கைவிட வேண்டும். 40 ரயில் நிலையங்களை தனியாரிடம் தாரைவார்க்க முயற்சிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லோகோ ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று நாடு தழுவிய 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  இதன்ஒருபகுதியாக, ஈரோடு ரயில் நிலையத்தில் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு ரயில்வே தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: