ஏர்வாடி இளம்பெண் மாயம் போலீசார் பெங்களூர் விரைவு

ஏர்வாடி, ஜூலை 16: நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி. கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து ராஜேஷ்வரியின் தந்தை, ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம்அலி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ராஜேஷ்வரி, பெங்களூரில் தங்கியிருப்பது தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: