அழகுமுத்துகோன் படத்துக்கு தென்காசி அதிமுக மரியாதை

தென்காசி, ஜூலை 12:  தென்காசியில் நகர அதிமுக சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. தென்காசி கூலக்கடை பஜாரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சுடலை தலைமை வகித்தார். நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் வெள்ளப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து,  மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்  மகபூப்மசூது, தர், 1919 கூட்டுறவு சங்க துணை தலைவர் முத்துக்குமாரசாமி, நகர துணை செயலாளர் மோகன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள்  சாகுல்ஹமீது, அருணாசலம், சுந்தரம், ராமதாஸ், பாலமுருகன், சுடலை, மாரியப்பன், திருமலைச்சாமிராஜா, உலகநாதன், இசக்கி, முத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர். 11வது வார்டு கனகசபாபதி நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: