மஞ்சங்குளம் ஈஸ்வரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

நாங்குநேரி, ஜூலை 12:  நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் உள்ள ஈஸ்வரியம்மன் கோயிலில், திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 9ம் தேதி முதல் விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில் மகா கணபதி பூஜை, கோபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், தொடர்ந்து 3 கால யாகபூஜைகள், மகாலட்சுமி, கன்னி  மற்றும் சுமங்கலி பூஜைகளும் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, பிம்ப ரக்ஷாபந்தனம், பூர்ணாஹூதி தீபாராதனை, யந்த்ர தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. பின்னர் ஈஸ்வரியம்மன், பேச்சியம்மன், சுடலைக்கண்ணு சுவாமி உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Related Stories: