தளி கால்வாய் அருகே குடிநீர் குழாய் சீரமைப்பு

உடுமலை, ஜூலை 11:தளி அருகே ஆனைமலை சாலையில், தளி கால்வாயின் குறுக்கே திருமூர்த்தி அணை குடிநீர் குழாய் செல்கிறது. இதன்மூலம் 20 கிராமங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில், கடந்த வாரம் 5 நாட்களாக  குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது. இதனால் கிராமங்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை.தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி வந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை நேற்று சரி செய்தனர். இதன் மூலம் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது.

Related Stories: