பொன்னமராவதி அருகே இளங்காவுடைய அய்யனார் கோயில் இரட்டை தேரோட்டம்

பொன்னமராவதி, ஜூன் 26: பொன்னமராவதி அருகே நெய்வேலியில் உள்ள இளங்காவுடைய அய்யனார் கோயில் இரட்டை தேர் தேரோட்ட விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி ஊராட்சி நெய்வேலியில் உள்ள இளங்காவுடைய அய்யனார் கோவில் இரட்டை தேர் திருவிழா நடைபெற்றது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 17.6.2019 திங்கட்கிழமை முதல் ஊர்ப்பொதுமக்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதார்கள் சார்பிலும் அய்யனாருக்கு சிறப்பு அலங்காரங்கள் வழிபாடு நடத்தி சுவாமி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.ஒன்பதாம் நாள் விழாவான நேற்று இளங்காவுடைய அய்யனார், விசமுனிக்கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சாமி புறப்பாட்டுக்கு பின்பு தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள ஊர்களான நெய்வேலி, ஆத்தங்காடு, நாகனிவயல் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.திரளான பக்தர்கள் தரிசனம்வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றி தண்ணீர் இல்லாத நிலையும், நீர் உறிஞ்சும் மோட்டார்கள் அதிக அளவில் பழுதடையும் நிலையும் ஏற்படும். இதனால் நகரில் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Related Stories: