கொட்டாய்மேடு கிராமத்தில் 5 ஆண்டாக செயல்படாத மகளிர் சுகாதார வளாகம்

கொள்ளிடம், ஜூன் 25: கொள்ளிடம் அருகே கொட்டாய்மேடு கிராமத்தில் 5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் மகளிர் சுகாதாரா வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே, கடலோர கிராமம் கொட்டாய்மேடு. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பெண்களின் நலன் கருதி மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இதில் மின்மோட்டார் அறை, 10 கழிவறைகள் மற்றும் குளியலறை வசதிகளுடன் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. ஆனால் சில மாதங்களிலேயே இந்த மகளிர் சுகாதார வளாகக் கட்டிடம் எந்த பயனுமின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர். நிலத்தடி நீரை எடுத்து தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில், நீர்த்தேக்க தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் பயனற்று கிடக்கிறது. இக்கட்டிடத்திற்குள் உள்ள மின்மோட்டாரும் பழுதடைந்து உள்ளது.எனவே 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: