கம்பம், ஜூன் 25: மன அழுத்தத்தை குறைக்க கம்பம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நேற்று முதல் யோகா பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மெல்லோட்டம், உடலை தளர்த்தும் பயிற்சிகள், யோகா விற்கு உடலை தயார் செய்யும் தயார்நிலை பயிற்சிகள், கழுத்து எலும்பு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு, கணுக்கால் மூட்டு இவற்றை தளர்த்தி ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளுடன் சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனப் பயிற்சிகளும், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதமார நிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன் கற்றுக்கொடுத்தார்.