காங்கயம்- சென்னிமலை சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

காங்கயம், ஜூன் 25:காங்கயம் நகரம்  மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த காவிரி குடிநீர் குழாய் பல இடங்களில் உடைந்து வீணாகி வருகிறது. கடுமையான  வறட்சி நிலவும் இந்த சமயத்தில் காங்கயம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையாகவே உள்ளது. இந்நிலையில், காங்கயம் நகரில் சென்னிமலை சாலையில்  நகராட்சி மின் மயானம் முன்பு குழாய் உடைந்து கடந்த பல மாதங்களாக அருகில் உள்ள கழிவு நீர் கால்வாயில் கலந்து ஓடுகிறது. மேலும் குழாய் உடைந்த இடத்தின் அருகே சாலையோரம் தண்ணீர் தேங்கி அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி விட்டது. இதனால் சாலையில்  நடந்து செல்பவர்களும்  சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

இவ்வாறு குடிநீர் வீணாகி போவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு பல இடங்களில் குழாய்  உடைந்து தண்ணீர் சாலையோரங்களில் ஓடிக்கொண்டுள்ளதை உடன்டியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் உடைப்பை சரி  செய்தாலே பல லட்சம் குடிநீர் வீணாவதை தடுக்க முடியும். அதிகாரிகள் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: