அதிகாரிகளுக்கு ஆலோசனை வி.கைகாட்டி அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அரியலூர், ஜூன் 21: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே விக்கிரமங்கலத்தில் ஊரகவளர்ச்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து வணிக நிறுவனங்களில் வட்டாரவளர்ச்சிஅலுவலர் ஜாகிர்உசேன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்தனர்.

அப்போதுஅரசால்தடைசெய்யப்பட்டபிளாஸ்டிக்பொருட்கள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 27 கிலோ மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல்செய்து, 7 ஆயிரத்து 300 ரூபாய்அபராதம் விதித்தனர். ஆய்வின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாதுஎன்றும், மீறி பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அழிக்கப்படும்என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தஆய்வில்தா.பழூர்வட்டார சுகாதாரமேற்பார்வையாளர் பாஸ்கரன் மண்டல துணைவட்டாரவளர்ச்சிஅலுவலர்இளங்கோவன் , சுகாதாரஆய்வாளர்கள் குமார், ஆனந்த், ஊராட்சிசெயலாளர்கள் கண்ணன் , முருகானந்தம், சாமிதுரை, ரவி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: