வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி

பழநி, ஜூன் 19: பழநியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றிய அளவிலான வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி நடந்தது. பழநி, தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி, சுயநிதி பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  பயிற்சியில் மாணவர்களுக்கு எளிதான முறையில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: