விக்கிரமராஜா பேட்டி குளித்தலை அரசு பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஓவிய போட்டி

குளித்தலை, ஜூன் 18: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் 2019ம் ஆண்டின் மையக்கருத்தான காற்று மாசுபாட்டை குறைப்போம் என்ற தலைப்பின் படி கரூர் சுற்றுச்சூழல் மற்றும் பசுமை படை இணைந்து நடத்திய உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஓவிய போட்டி குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை மஞ்சுளா தலைமையில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு முன்னிலையில் போட்டி நடைபெற்றது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்து விழிப்புணர்வு போட்டியை துவக்கி வைத்தார்.இப்போட்டியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 12 பள்ளிகளிலிருந்து சுமார் 134 மாணவர்கள் கலந்து கொண்டனர். 6 முதல் 8ம் வகுப்பு வரை 3 பரிசு, 9 முதல் 10ம் வகுப்பு வரை 3 பரிசு, 11, 12ம் வகுப்புகளுக்கு 3 பரிகளும் வழங்கப்பட்டது. இப்போட்டிக்கான ஏற்பாட்டினை குளித்தலை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி செய்திருந்தார்.

Related Stories: