ஜெயங்கொண்டம் நகராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம், ஜூன்18: ஜெயங்கொண்டம் கடைவீதியில் நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் காலாவதியான உணவுப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு ரூ.8ஆயிரம் அபராதம் விதித்தனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் இணைந்து ஜெயங்கொண்டம் 4 ரோடு, பேருந்து நிலையம், விருத்தாசலம் சாலை, வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.அரசால் தடைசெய்யப்பட்டட மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த 12 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பில் அபராதம் விதித்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காலாவதி பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் சசிகுமார் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் இந்துமதி உள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories: