நீதிமன்ற உத்தரவை அவமதித்து மனுதாரரை சப்-கலெக்டர் மிரட்டியதாக புகார்

காரைக்கால், ஜூன் 18: நீதிமன்ற உத்தரவை அவமதித்து, ஜப்தி நடவடிக்கையை காணவந்த மனுதாரரை சப்-கலெக்டர் மிரட்டியதாக புகார் எழுந்திருப்பது காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நில ஆர்ஜிதம் செய்தது. ஆனால் தனது நிலத்திற்கு கூடுதல் தொகை வேண்டும் என, ஹஜ்முகமது காரைக்கால் நீதிமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.2017ம் ஆண்டு, ஒரு குழிக்கு 3500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் 165 குழிக்கு ரூ.7 லட்சத்து 89 ஆயிரம் புகார்தாரருக்குக்கு வழங்க வேண்டும் என்றும் காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கடந்த மாதம் வரை அதற்கான தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில், வட்டி மற்றும் இதர செலவுகளூடன் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அனுகினார். தொடர்ந்து, ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்தை உடனே சம்பந்தப்பட்ட புகார்தாரருக்கு கொடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவிற்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மரச்சாமான்கள் கணிப்பொறி மற்றும் வாகனம் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், காரைக்கால் மாவட்டகலெக்டர் அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற குமாஸ்தாக்கள் நேற்று காலை சென்றனர். ஜப்தி நடவடிக்கையை கானூம் பொருட்டு, புகார்தாரர் நீதிமன்ற குமாஸ்தாக்களுடன் அங்கு சென்றார்.அப்போது, மனுதாரரை மறித்த அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மனுதாரரை சமாதானப்படுத்திய ஊழியர்கள், அவரை மட்டும் தனியாக சப்-கலெக்டர் அறைக்கு அழைத்துச் சென்றனர். சார்பு ஆட்சியர் அறையிலிருந்து வெளியில் வந்த மனுதாரர் ஹஜ் முஹம்மது, சார்பு ஆட்சியர் மற்றும் ஊழியர்கள் தன்னை தனியாக அழைத்து மிரட்டுவதாக புகார் தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப் பட்டனர். இது குறித்து, மனுதாரர் கூறும்போது,அடுத்த கட்டமாக வரும் 24ம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தை ஜப்தி செய்ய காவல் துறையின் உதவி கேட்டு காரைக்கால் நீதிமன்றத்தில் மனு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: