சீர்காழியில் ஜமாபந்தி 135 மனுக்கள் குவிந்தன

சீர்காழி, ஜூன் 14: சீர்காழியில் நடந்த ஜமாபந்தியில் 135 மனுக்கள் குவிந்தன.சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி தொடங்கி 21ம்தேதி வரை நடைபெற உள்ளது. ஜமாபந்தி நிகழ்ச்சியில் மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி கலந்துகொண்டு சீர்காழி வருவாய் சரகத்திற்கு உட்பட்ட பச்சை பெருமாநல்லூர், ஆர்ப்பாக்கம், உமையாள் பதி, கடவாசல், வரிசைபத்து, வடகால், ஆலங்காடு, மகாராஜபுரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், ராதாநல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் 135மனுக்களை பெற்று உடனே 56 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் 6 பயனாளிக்கு முதியோர் உதவி தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தாசில்தார் சபிதாதேவி, தனி தாசில்தார்கள் இந்துமதி, ராணி, மயிலாடுதுறை கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் காந்திமதி, மண்டல துணை தாசில்தார் பாபு, நில அளவை பிரிவு சார் ஆய்வாளர்கள் பாரதிராஜா, மனோஜ், சரக வருவாய் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: