வாசுதேவநல்லூரில் 231 மது பாட்டிலுடன் இருவர் கைது

சிவகிரி, ஜூன் 14:  வாசுதேவநல்லூரில் 231 மதுபாட்டில்களுடன் இருவரை போலீசார் கைது செய்தனர். வாசுதேவநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ சந்திரமூர்த்தி தலைமையில் ஏட்டு பழனிசாமி மற்றும் சங்கர், ராம்குமார் உள்ளிட்ட போலீசார் வாசுதேவநல்லூர் - நெற்கட்டும்செவல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டு பகுதி அருகே சாக்கு மூட்டைகளுடன் உட்கார்ந்திருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கூடலூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோமதிபாண்டியன் (47), திருமலாபுரம் கன்னிமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேலுசாமி (65) என்பதும், சாக்குமூட்டைகளில் மொத்தம் 231 மதுபாட்டில்கள் ைவத்திருந்ததும் தெரிய வந்தது. கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதும் தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: