விபத்துக்கு முன் சீரமைக்கப்படுமா? பெரியகுளத்தில் மாணவர்கள் மத்தியில் தீத்தடுப்பு நடவடிக்கை

பெரியகுளம், ஜூன் 13: பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான தீயணைப்பு அலுவலர்கள் தீத்தடுப்பு மற்றும் வெள்ள அபாய காலங்களில் மாணவ, மாணவியர் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

அப்போது மாணவ, மாணவியரிடையே உரையாற்றிய நிலைய அலுவலர் பழனிச்சாமி கூறுகையில், திடீரென பற்றும் தீயில் மேல்மாடி போன்ற இடங்களில் மாட்டிக்கொள்ளும் நபர்களை காப்பாற்றும் முறை மற்றும் தீ உடலில் பற்றிக்கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்றும் அதே போன்று வெள்ளம் எற்படும் காலங்களில் வெள்ள நீரில் மாட்டி தவிக்கும் நபர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Related Stories: