விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் 15ல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூன் 13: காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 15ம் தேதி திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.எரிவாயு நுகர்வோர்களுக்கான சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில் திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட காஸ் நுகர்வோர் சிலிண்டர் மறு நிரப்பு பதிவு செய்து பெறுவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் மற்றும் நுகர்வோர் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் காஸ் ஏஜென்சிகளின் தாமதப்போக்கு ஆகிய குறைபாடுகள் தொடர்பான புகார்கள் மனுக்கள் மூலமாக பெற்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நுகர்வோர், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு காஸ் சிலிண்டர் விநியோகம் தொடர்பான குறைபாடுகளை மனுக்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: