தொழிலாளர்கள் மீது தாக்குதல் வடமாநில தொழிலாளர்கள் சாலை மறியல்

திருப்பூர், ஜூன் 13:  திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு முதலிபாளையம் சிட்கோ தொழில் பேட்டை வளாகத்தில் வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி வடமாநில தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு முதலிபாளையம் சிட்கோ தொழில்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில், தமிழகம், வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன் தினம் மாலை தமிழக தொழிலாளர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், வடமாநில தொழிலாளி லட்சுமணனை சிலர் தாக்கியதில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் சிகிசைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை 11 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை விலக்கிக்கொண்டனர். மறியல் காரணமாக திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.

Related Stories: