உத்தமபாளையம், ஜூன் 12: உத்தமபாளையத்தில் உணவு பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. உத்தமபாளையம் முகமது பாத்திமா மகளிர் உயர்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் வரவேற்றார். உணவு பாதுகாப்பு பற்றி தலைமை ஆசிரியர் ஆபித் விளக்கினார்.