கேரளாவில் பருவமழை துவங்கியதால் சின்னாறில் நீர்வரத்து அதிகரிப்பு

உடுமலை, ஜூன் 12: உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு, தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் வருகிறது. இதில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு, கூட்டாறு வழியாக, அமராவதி அணைக்கு தண்ணீர் வருகிறது. கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் கொளுத்திய நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலும், கேரளாவிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சின்னாறுக்கு தண்ணீர் வரத்துவங்கி உள்ளது. வறண்டு கிடந்த சின்னாறில் தண்ணீர் அதிகரிக்க துவங்கி உள்ளதால், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால், ஜூன் முதல் வாரத்திலேயே அமராவதி அணையின் நீர்மட்டம் பாதியை தாண்டிவிட்டது. ஆனால் தற்போது 30 அடிக்கும் குறைவாகவே நீர்மட்டம் உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால்தான் அணை நீர்மட்டம் வேகமாக உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: