திருத்துறைப்பூண்டியில் ஜமாபந்தி

திருத்துறைப்பூண்டி, ஜூன்12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 77 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு ஜமாபந்தி தாலுக்கா அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி துவங்கிதினமும் கிராமம் வாரியாகநடைபெற்று வருகிறது. நேற்று வருவாய் தீர்ப்பாய அலுவலரும், மாவட்டவழங்கல் அலுவலருமான தெய்வநாயகி தலைமை வகித்தார், நேற்றுஆலத்தம்பாடி சரகம், திருவலஞ்சுழி, பூசலாங்குடி, ஆலிவலம், ஆதனூர், கோமல், ஆண்டாங்கரை, கீராளத்தூர், திருத்தங்கூர், அம்மனூர், விளத்தூர், ஆலத்தம்பாடி, பழயங்குடி ஆகிய வருவாய் கிராமங்களிலிருந்து வீட்டு மனைபட்டா, பட்டா மாறுதல், நில அளவை, குடும்ப அட்டை வேண்டுதல் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள்அளித்தனர். மனுக்கள் உடனடியாக அந்தந்த துறைக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தாசில்தார் ராஜன்பாபு, வட்டவழங்கல் அலுவலர் ராஜாமணி, தனிதாசில்தார் ஞானசுந்தரி, துணை தாசில்தார்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: